தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ காலம் தவறாமல் ரயில்களை இயக்குவதில் மதுரை ரயில்வே கோட்டம் இரண்டாமிடம்; கோட்ட மேலாளர் தகவல்

 காலம் தவறாமல் ரயில்களை இயக்குவதில் மதுரை ரயில்வே கோட்டம் இரண்டாமிடம்; கோட்ட மேலாளர் தகவல்

 காலம் தவறாமல் ரயில்களை இயக்குவதில் மதுரை ரயில்வே கோட்டம் இரண்டாமிடம்; கோட்ட மேலாளர் தகவல்


ADDED : ஜன 27, 2026 08:15 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 27, 2026 08:15 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: தேசிய அளவில் காலம் தவறாமல் ரயில்களை இயக்குவதில் மதுரைக் கோட்டம் இரண்டாமிடத்தில் உள்ளதாக கோட்ட மேலாளர் ஓம் பிரகாஷ் மீனா தெரிவித்தார்.

மதுரை ரயில்வே காலனி மைதானத்தில் நேற்று நடந்த குடியரசு தின விழாவில் கொடியேற்றியபின் அவர் பேசியதாவது:

மதுரைக் கோட்டத்தில் இதுவரை 3.68 கோடி பயணிகள் பயணித்துள்ளதன் மூலம் ரூ.658 கோடி வருமானம் ஈட்டப்பட்டுள்ளது. கடந்தாண்டைவிட 12 சதவீதம் அதிகம்.சரக்கு போக்குவரத்து மூலம் ரூ.296 கோடி வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.

குறிப்பாக ஜூலை மாதம் அதிகபட்சமாக ரூ.42 கோடி ஈட்டப்பட்டுள்ளது. கடந்தாண்டை விட 21.48 சதவீதம் அதிகமாக 2.61 மில்லியன் டன் சரக்குகள்கையாளப்பட்டுள்ளன. இதர வகை வருமானமாக ரூ.27 கோடி ஈட்டப்பட்டுள்ளது.

காலந்தவறாமை கோட்டத்தில் இயக்கப்பட்ட 22 ஆயிரத்து 648 விரைவு ரயில்களில்97.05 சதவீதம், 15 ஆயிரத்து 619 பாசஞ்சர் ரயில்களில் 98.49 சதவீதம் காலந்தவறாமல் இயக்கப்பட்டுள்ளன.

இதன்மூலம் தேசிய அளவில் காலந்தவறாமையில் மதுரை கோட்டம் 2ம் இடத்தில் உள்ளது. சரக்கு ரயில்களை மணிக்கு 39.58 கி.மீ., வேகத்தில் இயக்கி, தேசிய அளவில் சரக்கு ரயில்களை வேகமாக இயக்குவதில் முதல் இடத்தை தக்க வைத்துள்ளது. இந்நிதியாண்டில், டிச., வரை895 சிறப்பு ரயில்கள், தாம்பரம் - ராமேஸ்வரம் இடையே புதிய ரயில் சேவை, திருவனந்தபுரம் - தாம்பரம், நாகர்கோவில் - நியூஜல்பைகுரி இடையே புதிய அம்ரித் பாரத் ரயில் சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. விரைவு ரயில்களுக்கு 30 நிறுத்தங்கள்கூடுதலாகவழங்கப்பட்டுள்ளன.

காரைக்குடி, சோழவந்தான், ஸ்ரீவில்லிபுத்துார், மணப்பாறை ஸ்டேஷன்கள் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் தரம் உயர்த்தப்பட்டு திறப்பு விழா காணவுள்ளன. 9 மாதங்களில் 63 கி.மீ., ரயில் பாதை புதுப்பிக்கப்பட்டுள்ளன. 130 கி.மீ., வேகத்தில் ரயில்களை இயக்கும் வகையில் தண்டவளங்கள் பலப்படுத்தப்பட்டு வருகின்றன.

நுாறு சதவீதம் மின்சார இன்ஜின்களை தொய்வில்லாமல் இயக்க தேனி, புனலுாரில் புதிய மின் உபநிலையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.ராமநாதபுரம் - ராமேஸ்வரம் இடையே மின்மயமாக்கல் பணிகள் முடிவுற்றதன் மூலம் மதுரை கோட்டம் 100 சதவீத மின்மயமாக்கப்பட்டுள்ளது.மண்டல அளவில் சுத்தம், சுகாதாரத்தில்2வது சுழற் கேடயத்தை மதுரை ஸ்டேஷன் பெற்றுள்ளது என்றார்.

ரயில்வே பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள், ஆர்.பி.எப்., சார்பில் மோப்ப நாய்களின் சாகசங்கள் நடைபெற்றன. கூடுதல் கோட்ட மேலாளர் ராவ், முதுநிலை கோட்ட ஊழியர் நல அதிகாரி சுவாமிநாதன், பாதுகாப்பு படை கமிஷனர் செஞ்ஜையா உட்பட பலர் பங் கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us