/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரையில் ‛ஹாட்ரிக்'; அடைமழை கள்ளிக்குடியில் 97.2 மி.மீ., பதிவானது
/
மதுரையில் ‛ஹாட்ரிக்'; அடைமழை கள்ளிக்குடியில் 97.2 மி.மீ., பதிவானது
மதுரையில் ‛ஹாட்ரிக்'; அடைமழை கள்ளிக்குடியில் 97.2 மி.மீ., பதிவானது
மதுரையில் ‛ஹாட்ரிக்'; அடைமழை கள்ளிக்குடியில் 97.2 மி.மீ., பதிவானது
ADDED : டிச 15, 2024 06:55 AM
மதுரை : மதுரையில் 3வது நாளாக பகலிலும் நேற்று அடைமழை தொடர்ந்தது. கள்ளிக்குடியில் நேற்று முன்தினம் அதிகபட்சமாக 97.2 மி.மீ., மழை பதிவானது.
மதுரையில் 3 நாட்களாக சூரியன் எட்டி பார்க்க முடியாதபடியும் பகல், இரவு கணக்கின்றி சாரலாகவும், துாறலாகவும் அவ்வப்போது கனமழையாகவும் பெய்து வருகிறது. பகலிலேயே குளிரின் ஆதிக்கத்தை உணரமுடிந்தது.
நேற்று முன்தினம் அதிகபட்சமாக கள்ளிக்குடியில் 97.2 மி.மீ., மழை பதிவானது. இடையபட்டி 72, திருமங்கலம் 55.6, உசிலம்பட்டி 40, தல்லாகுளம் 39.2, சோழவந்தான் 38, எழுமலை 36.2, பேரையூர் 35.6, மேட்டுப்பட்டி 34.2, ஏர்போர்ட் 30.4, பெரியபட்டி 30.2, மதுரை வடக்கு 28.8, தனியாமங்கலம் 27, விரகனுார் 23, புலிப்பட்டி 22, வாடிப்பட்டி 22, கள்ளந்திரி 21, மேலுார் 20.2, குப்பணம்பட்டி 20, சாத்தையாறு அணை 18, சிட்டம்பட்டி 16.2 மி.மீ., மழை பதிவானது.
முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் 127.65 அடி, மொத்த உயரம் 152 அடி, நீர் இருப்பு 4190 மில்லியன் கனஅடி, நீர்வரத்து வினாடிக்கு 17ஆயிரத்து 652, வெளியேற்றம் 1400 கனஅடி.
வைகை அணை நீர்மட்டம் 55.25 அடி, மொத்த உயரம் 71 அடி, நீர் இருப்பு 2759 மில்லியன் கனஅடி, நீர்வரத்து வினாடிக்கு 9449, வெளியேற்றம் 69 கனஅடி. சாத்தையாறு அணை நீர்மட்டம் 23.2 அடி, மொத்த உயரம் 29 அடி, நீர்வரத்து வினாடிக்கு 110 கனஅடி.