ADDED : ஏப் 13, 2026 12:50 AM
அ நிறம் | அளவு
விருதுநகர்: மதுரை மாவட்டம் பெருங்குடி முத்துராமன் 55. இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. இவர் கொலை வழக்கில் கைதாகி மதுரை சிறையில் இருந்தபோது விருதுநகர் சூலக்கரையை சேர்ந்த ஒருவருடன் நட்பு ஏற்பட்டது.
சிறையில் இருந்து வெளிவந்த முத்துராமன் சிறையில் இருந்த நண்பரை பார்க்க நேற்று காலை சூலக்கரை வந்தார். அப்போது முத்துராமனை பின்தொடர்ந்த கும்பல், சிவகாசி ரோட்டில் சாய்பாபா கோயில் அருகே உள்ள பழைய கோடவுனில் வைத்து அவரை வெட்டி கொலை செய்தது. சூலக்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.
