தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ அப்பள ஏற்றுமதி மையமாக மதுரை உருவாக வேண்டும்

 அப்பள ஏற்றுமதி மையமாக மதுரை உருவாக வேண்டும்

 அப்பள ஏற்றுமதி மையமாக மதுரை உருவாக வேண்டும்


ADDED : ஆக 05, 2026 03:46 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 05, 2026 03:46 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: அப்பள ஏற்றுமதி மையமாக மதுரை உருவாக வேண்டும் என மதுரையில் நடந்த தமிழ்நாடு அப்பளம் வடகம் மோர் வத்தல் சங்கத்தின் 14வது ஆண்டு விழாவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மாநிலத் தலைவர் திருமுருகன் தலைமை வகித்தார். மியான்மர் நாட்டின் கவுரவத் துாதர் ரங்கநாதன், தமிழ்நாடு உணவுப் பொருள் வியாபாரிகள் சங்க கவுரவ ஆலோசகர் ஜெயப்பிரகாசம் முதன்மை விருந்தினர்களாக பங்கேற்றனர். மாநில அளவில் 500 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

அப்பள மூலப்பொருளான உளுந்தம் பருப்பை மானிய விலையில் மத்திய, மாநில அரசுகள் வழங்கவேண்டும். திண்டுக்கல்லில் மோர் மிளகாய் உற்பத்திக்கு உடனடி அனுமதி வழங்க வேண்டும். இயற்கை முறையில் தயாரிக்கப்படும் கலர் அப்பளத்திற்கு அரசு பாதுகாப்பு வழங்குவதோடு வெளிமாநிலங்களில் இருந்து வரும் தரமற்ற கலர் அப்பளங்களை தடைசெய்ய வேண்டும். மதுரை சிந்தாமணியை அப்பளம், வடகம், மோர் வத்தல் ஏற்றுமதி மையமாக அறிவித்து ஒருங்கிணைந்த தொழில் வளாகம் அமைக்க வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us