ADDED : மார் 13, 2024 01:01 AM

மதுரை : மலேசியா கோலாலம்பூரில் நடந்த சர்வதேச கராத்தே போட்டியில் மதுரை மாணவர்கள் வெற்றி பெற்றனர்.
13 வது சைலன்ட் நைட் சர்வதேச கராத்தே போட்டியில் மலேசியா, சிங்கப்பூர், இந்தியா, இந்தோனேசியா, இலங்கை, பிலிப்பைன்ஸ் உட்பட 18 நாடுகள் பங்கேற்றன.
இதில் மதுரை குளோபல் சர்வதேச பள்ளி மாணவர்கள் ஆதில், கவின் கண்ணா, திவ்யதர்ஷன், ரோஹித் கண்ணன், ஹரிஷ் குமார், ஹர்ஷன் ஆகியோர் இந்திய கராத்தே அணியில் தேர்வாகி இப்போட்டியில் பங்கேற்றனர்.
10 முதல் 13 வயது ஆண்கள் குழு கட்டா பிரிவில் ரோஹித் கண்ணன், ஹர்ஷன், திவ்யதர்ஷன் வெள்ளிப்பதக்கம் வென்றனர். 14 முதல் 15 வயது சண்டை பிரிவில் ஆதில் வெள்ளிப்பதக்கம், 13 வயது குழு சண்டை பிரிவில் ஹரிஷ் குமார், கவின் கண்ணா வெண்கலப்பதக்கம் வென்றனர்.
கோவை சிவசண்முகம் இந்திய கராத்தே அணியின் தமிழக பயிற்சியாளராக பங்கேற்றார்.
மதுரை, சேலம் பயிற்சியாளர்கள் கவுரி ஷங்கர், சதீஷ்குமார், ராஜி போட்டி நடுவர்களாக பங்கேற்றனர். உலக கராத்தே சங்க நடுவர் முத்துராஜூ,குளோபல் பள்ளித் தாளாளர் காந்தி, இயக்குநர்கள் பிரசன்னா, உமாமகேஸ்வரி, ராஜமூர்த்தி, முதல்வர் ராபியா பஷீரா பாராட்டினர்.
