/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மாநில சிலம்ப போட்டியில் மதுரை மாணவர்கள் வெற்றி
/
மாநில சிலம்ப போட்டியில் மதுரை மாணவர்கள் வெற்றி
ADDED : பிப் 18, 2024 01:09 AM
மதுரை: மதுரை மாடக்குளம் ஸ்ரீ வசிஷ்டா ஆங்கில பள்ளியில் தமிழ் பாரம்பரிய சிலம்பப் பள்ளி சார்பில் மாநில அளவிலான சிலம்ப போட்டி நடந்தது.
சிலம்ப பள்ளி நிறுவனர் சுரேஷ்குமார் தலைமை நடுவராக செயல்பட்டார். மாவட்ட செயலாளர்கள் கார்த்திக், பாலகாமராஜன், அங்குவேல், தணிகைவேல், சோபியா ஜெயக்குமார், அஜித் குமார் உடன் இருந்தனர்.
சப் ஜூனியர் பிரிவில் ஸ்ரைன் நர்சரி பள்ளி கிர்சவ் முருகேஷ் தங்கப்பதக்கம் வென்றார்.
கேடட் பிரிவில் செயின்ட் ஜோசப் மெட்ரிக் பள்ளி முகில் தங்கப்பதக்கம், லோகபரணி வெள்ளி பதக்கம், கேந்திரிய வித்யாலயா பள்ளி சுகனேஷ் வெள்ளிப் பதக்கம் வென்றனர்.
சப் ஜூனியர் பிரிவில் விகாசா உலகப்பள்ளி கேதவ் கிரித்திக், நிகு வெள்ளி பதக்கம், மகாத்மா மாண்டிசோரி பள்ளி லிங்கேஸ் நைத்ரோ வெண்கல பதக்கம் வென்றனர். தாளாளர் செல்வம், முதல்வர் மதனிகா, பொறியாளர் அரவிந்த் பரிசு வழங்கினர். வெற்றி பெற்ற மாணவர்கள் அடுத்த மாதம் விஜயவாடாவில் நடக்கும் தேசிய போட்டியில் பங்கேற்கின்றனர்.