/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
அகில இந்திய ஹாக்கியில் மதுரை அணி சாம்பியன்
/
அகில இந்திய ஹாக்கியில் மதுரை அணி சாம்பியன்
ADDED : டிச 30, 2025 07:17 AM

வாடிப்பட்டி: வாடிப்பட்டி அரசு ஆண்கள் பள்ளியில் ராஜா ஹாக்கி அகாடமி, எவர்கிரேட் ஹாக்கி கிளப் சார்பில் ஏ.ஆர்.எஸ்., டிராபி 2025 போட்டி ஹாக்கி தந்தை எல்.ராஜு, உதவி மின் பொறியாளர் வீராச்சாமி நினைவாக அகில இந்திய ஹாக்கி போட்டி நடந்தது.
இதில் 12 அணிகள் பங்கேற்றன. இறுதிப்போட்டியில் மதுரை ஜி.கே.மோட்டார்ஸ் அணி, சென்னை சிட்டி போலீஸ் அணியை 2-:1 கோல் கணக்கில் வென்றது. பெங்களூரு எஸ்.டி.சி., அணி 3ம் பரிசு, பாண்டிச்சேரி குருவி நத்தம் அணி 4ம் பரிசு பெற்றன. பரிசளிப்பு விழாவுக்கு இந்திய ஹாக்கி அணி பயிற்சியாளர் சி.ஆர்.குமார் தலைமை வகித்தார். தொழிலதிபர் தங்கராஜ், ராஜன் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் மெல்வின், இந்தியன் வங்கி மண்டல மேலாளர் பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தனர்.
இந்திய ஹாக்கி அணி முன்னாள் கேப்டன் ராஜா வரவேற்றார். ஏ.ஆர்.எஸ்., ஸ்டீல்ஸ் நிறுவன துணை நிதி இயக்குனர் பிரபு கோப்பை, பரிசு வழங்கினார். தாய் பள்ளி நிர்வாகி காந்தி, எவர்கிரேட் செயலாளர் சிதம்பரம், உடற்கல்வி ஆசிரியர் சுரேஷ், வங்கி மேலாளர் கமலக்கண்ணன், கவுன்சிலர் ஜெயகாந்தன், மதுரை ஹாக்கி சங்க தலைவர் கண்ணன், ரத்னா குரூப் தலைவர் தனசேகரன், வாண்டையார் டிரஸ்ட் தலைவர் ராஜ்மோகன் பங்கேற்றனர்.
சுழற்கோப்பை வாடிப்பட்டி பேரூராட்சி தலைவர் பால்பாண்டியன் தலைமையில் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டது.

