தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/மதுரை: நாளைய நிகழ்ச்சிகள் 24/11/2026

மதுரை: நாளைய நிகழ்ச்சிகள் 24/11/2026

மதுரை: நாளைய நிகழ்ச்சிகள் 24/11/2026


ADDED : நவ 23, 2026 07:12 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 23, 2026 07:12 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோயில்

* கார்த்திகையை முன்னிட்டு லட்சதீபம் ஏற்றுதல்: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, மாலை 6:00 மணி, கீழமாசி வீதி தேரடி அருகிலும், சுவாமி சன்னதி தெரு அருகிலும் சொக்கப்பனை கொளுத்துதல், இரவு 7:00 மணி.

* கார்த்திகை திருவிழா: சுப்பிரமணிய சுவாமி கோயில், திருப்பரங்குன்றம், ரதாரோகணம் சிறிய வைரத்தேரில் வீதியுலா, காலை 8:15 மணிக்கு மேல் 8:45 மணிக்குள், மலை மேல் கார்த்திகை மகா தீபம், 16 கால் மண்டபம் அருகில் சொக்கப்பனைக் காட்சி, மாலை 6:00 மணிக்கு மேல், தங்கமயில் வாகனத்தில் சுவாமி புறப்பாடு, இரவு 8:00 மணி.

* கார்த்திகை தீப உற்ஸவம்: கள்ளழகர் கோயில், அழகர்கோவில், பெரிய தோளுக்கினியானில் பெருமாளை எழுந்தருளச் செய்து திருமடப்பள்ளி நாச்சியாருக்கு திருமஞ்சனம், சுவாமி சன்னதிகளில் நெய் தீபம் ஏற்றுதல், அழகர்மலை உச்சியில் உள்ள வெள்ளி மலையாண்டி கோயில் கோம்பை கொப்பரையில் மகா தீபம் ஏற்றுதல், மாலை 6:15 மணிக்கு மேல்.

* கார்த்திகை மகா தீபம்: முருகன் கோயில், சோலைமலை, அழகர்கோவில், சுவாமி சன்னதிகள், பிரகாரங்களில் நெய் தீபம் ஏற்றுதல், சுவாமி புறப்பாடு, ராஜ கோபுரம் முன் கார்த்திகை மகா தீபம் ஏற்றி, சொக்கப்பனை கொளுத்துதல், மாலை 6:00 மணி.

* கார்த்திகை தீபம்: ஐயப்ப சுவாமி கோயில், பைபாஸ் ரோடு, மதுரை, ஐயப்பனுக்கு அலங்காரம், தீபாராதனை, மாலை 5:00 மணி.

பக்தி சொற்பொழிவு

* கார்த்திகை தீபம் ஏற்றி சிவ நாமாவளிகள் பாடுதல்: ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, இரவு 7:00 மணி.

* தியானம், சத்சங்கம்: நிகழ்த்துபவர் – கோகுல்நாத், சித்தாஸ்ரமம், தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: வாழ்வியல் தியான மையம், காலை 7:15 மணி.

* யோகாசன பயிற்சி – சூர்ய வணக்கம் பயிற்சிகள், 14 புள்ளி அக்குபிரசர் பயிற்சிகள், சாந்தி தவம்: மதுரை அறிவுத்திருக்கோயில் மனவளக்கலை மன்றம், பீ.பி.குளம், மதுரை, காலை 6:00 முதல் 8:00 மணி வரை, காலை 10:30 முதல் மதியம் 12:30 மணி வரை, மாலை 6:00 முதல் இரவு 8:00 மணி வரை.

* கார்த்திகை தீபத்தின் மகிமை: நிகழ்த்துபவர் – சுவாமி நித்யானந்தகிரி, சாயல்குடி ஆதீனம், பாரதியார் தெரு, சீதாலட்சுமி நகர் பூங்கா அருகில், கலைநகர் 2வது மெயின்ரோடு, மதுரை, மாலை 6:30 மணி.

* ஆன்மிக சொற்பொழிவு: மருதுபிள்ளை – சரவணையம்மாள் திருமண மகால், சன்னதி தெரு, திருப்பரங்குன்றம், தலைமை: தியாகராஜர் கல்லுாரி ஓய்வு தமிழ்த்துறைத் தலைவர் மாரியப்பன், ‘மக்கள் சேவையே மகேசன் சேவை’ – நிகழ்த்துபவர்: அசோக்குமார், ‘மனக்கவலை தீர்க்கும் மயில்வாகனன்’ – நிகழ்த்துபவர்: மங்கையர்க்கரசி, ‘வடிவேலனே வாழ்க்கை துணை’ – நிகழ்த்துபவர்: வெங்கடாசலம், பக்திப் பாடல்கள் – பாடுபவர்: சிவன், ஏற்பாடு: திருக்கார்த்திகை அபிஷேக விழாக்குழு, காலை 10:00 மணி.

* கிருத்திகா மண்டல யஜுர் வேத பாராயணம்: சிருங்கேரி சங்கர மடம், பைபாஸ் ரோடு, மதுரை, மாலை 6:00 மணி.

* பகவத் கீதை 16ம் அத்தியாயம் விளக்கவுரை: நிகழ்த்துபவர் – கிருஷ்ணமூர்த்தி, வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி.

பள்ளி, கல்லூரி

* ஏ.ஐ., தொடர்பாக ஆசிரியர் திறன் மேம்பாட்டு பயிற்சி : வேலம்மாள் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, விரகனுார், மதுரை, ஏற்பாடு : தகவல் தொழில்நுட்பத் துறை, காலை 9:00 மணி.

கண்காட்சி

* 41வது தேசிய புத்தக கண்காட்சி: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், மேலகோபுரத் தெரு, மதுரை, காலை 9:30 முதல் இரவு 9:00 மணி வரை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us