தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/மதுரை மாவட்டம் நிகழ்ச்சி 09/10/2026

மதுரை மாவட்டம் நிகழ்ச்சி 09/10/2026

மதுரை மாவட்டம் நிகழ்ச்சி 09/10/2026


UPDATED : அக் 08, 2026 10:28 PM

ADDED : அக் 08, 2026 06:46 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 08, 2026 10:28 PM ADDED : அக் 08, 2026 06:46 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோயில்

* புரட்டாசி 4ம் வெள்ளியை முன்னிட்டு சுவாமிக்கு ராஜ அலங்காரம்: முனியாண்டி சுவாமி கோயில், யூனியன் வங்கி காலனி, 4வது தெரு, விளாங்குடி, மதுரை, இரவு 7:00 மணி.

* ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்கு சித்திரை வீதி, மதுரை, காலை 10:30 மணி.

பக்தி சொற்பொழிவு

* வால்மீகி ராமாயணம்: நிகழ்த்துபவர் - ரெங்கன் ஜி, லட்சுமி சுந்தரம் ஹால், தல்லாகுளம், மதுரை, ஸ்ரீராமஜெயம், மாலை 4:00 மணி, ராம பட்டாபிஷேகம், ஏற்பாடு: அகில பாரத ஸாது சங்கம், இரவு 7:00 மணி.

* அகண்ட நாம சங்கீர்த்தனம்: 'கோகுலம்', எம்.ஏ.வி.எம்.எம்., பாலிடெக்னிக் அருகில், அழகர்கோவில், ஏற்பாடு: அகில பாரத ஸாது சங்கம், காலை 7:00 முதல் மதியம் 2:00 மணி வரை.

* திருக்குறள்: நிகழ்த்துபவர் - சந்தானம், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.

* தியானம், சத்சங்கம்: நிகழ்த்துபவர் - கோகுல்நாத், சித்தாஸ்ரமம், தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: வாழ்வியல் தியான மையம், காலை 7:15 மணி.

* லலிதா சஹஸ்ர நாம பாராயணம்: ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, இரவு 7:00 மணி.

* பகவத் கீதை - அத்தியாயம் 5: நிகழ்த்துபவர் - கிருஷ்ணமூர்த்தி, வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி.

பள்ளி, கல்லுாரி

* உலக விண்வெளி வார கொண்டாட்டத்தை முன்னிட்டு இஸ்ரோ ஸ்பேஸ் திருவிழா - விண்வெளி கண்காட்சி: சேது பொறியியல் கல்லுாரி, மதுரை, ராக்கெட், செயற்கைகோள் மாதிரிகள், விண்வெளி தொடர்பான காணொலிகள், இஸ்ரோ சயின்டிஸ்ட்களுடனான கலந்துரையாடல், மாணவர்களுக்கான பல்வேறு போட்டிகள், ஏற்பாடு: ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் ஸ்பேஸ் சென்டர், காலை 10:00 முதல் மாலை 4:30 மணி வரை.

* சவுராஷ்டிரா மேல்நிலைப்பள்ளி 123வது, இருபாலர் மேல்நிலைப்பள்ளி 79வது, தொடக்கப்பள்ளி 140வது ஆண்டு தடகள போட்டிகள்: சவுராஷ்டிரா மேல்நிலைப்பள்ளி மைதானம், மதுரை, தலைமை: சவுராஷ்டிரா ஹைஸ்கூல் கவுன்சில் தலைவர் ராம்நாத், சிறப்பு விருந்தினர்கள்: குவாலிட்டி நிட் வியர்ஸ் மேலாண் இயக்குநர் குமரன் ஜகுவா, இணை மேலாண் இயக்குநர் கிதுவா ஸ்ரீதர், காலை 8:30 மணி.

* உலக மனநல தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி: நாய்ஸ் மெட்ரிக் பள்ளி, மதுரை, ஏற்பாடு: அமெரிக்கன் கல்லுாரி இளநிலை உளவியல் துறை, காலை 9:45 மணி.

பொது

* மதுரை தமிழ் இசைச் சங்கத்தின் 52ம் ஆண்டு தமிழ் இசை விழா: ராஜா முத்தையா மன்றம், மதுரை, ராணி லேடி மெய்யம்மை ஆச்சி தமிழ் இசைக் கல்லுாரி மாணவிகளின் பரதநாட்டியம் - குரு, நட்டுவாங்கம்: சீதாலட்சுமி, கலைச்செல்வி, காயத்ரி தேவி, முத்துசெல்வம், பாட்டு - ரங்கநாயகி, ஸ்ரீநந்தினி, சீதாலட்சுமி, வயலின் - சச்சிதானந்தன், மிருதங்கம் - கோபிநாத், புல்லாங்குழல் மற்றும் கஞ்சிரா - சிவரூபன், ஒருங்கிணைப்பு: கல்லுாரி முதல்வர் மல்லிகா, மாலை 6:30 மணி.

* உலக மனநல தின கருத்தரங்கம்: அரசு மருத்துவமனை, மதுரை, சிறப்பு விருந்தினர்: டீன் அருள் சுந்தரேஷ் குமார், மருத்துவக் கல்லுாரி துணை முதல்வர் மல்லிகா, மருத்துவக் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், ஆர்.எம்.ஓ.,க்கள் சரவணன், முரளிதரன், காலை 10:00 மணி.

* சர்வ சமய அமைதி பிரார்த்தனை: சேவாலயம் மாணவர் இல்லம், செனாய் நகர், மதுரை, தலைமை: பல்சமய ஒற்றுமை நட்புறவு வளர்ச்சி மையம் செயலாளர் மோகன், அருட்செய்தி வழங்குபவர்: மதுரை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியை ராஜாத்தி, மாலை 6:00 மணி.

* காந்தி ஜெயந்தி பரிசளிப்பு விழா: காந்தி மியூசியம், மதுரை, தலைமை: காந்திய சிந்தனைக் கல்லுாரி மதிப்புறு இயக்குநர் ஆண்டியப்பன், பரிசு வழங்குபவர்கள்: காந்தி நினைவு நிதி செயலாளர் ராஜேந்திரன், மியூசிய செயற்குழு உறுப்பினர் ராமலிங்கம், கல்லுாரி முன்னாள் முதல்வர் முத்துலட்சுமி, சிறப்பு விருந்தினர்: எஸ்.பி.ஐ., வங்கி முன்னாள் உதவி பொது மேலாளர் மீனாட்சி சுந்தரம், ஏற்பாடு: காந்திய சிந்தனைக் கல்லுாரி, தமிழ்நாடு காந்தி நினைவு நிதி, காலை 10:00 மணி.

விளையாட்டு

* வருவாய் மாவட்ட அளவிலான மாணவிகளுக்கான சிலம்பப் போட்டி: தாய் மெட்ரிக் பள்ளி, வாடிப்பட்டி, ஏற்பாடு: பள்ளிக் கல்வித்துறை, காலை 8:00 மணி.

மருத்துவம்

* இதய மருத்துவ முகாம்: தேவதாஸ் மருத்துவமனை, சர்வேயர் காலனி, மதுரை, இலவச ஆலோசனை வழங்குபவர் - டாக்டர் நிஜாமுதீன், மதியம் 3:00 முதல் மாலை 6:00 மணி வரை, இலவச காது, மூக்கு, தொண்டை மருத்துவ முகாம், மாலை 5:00 முதல் இரவு 8:00 மணி வரை.

கண்காட்சி

* சிக்னேச்சர் ஜூவல்லரி ஷோ: ஜோஸ் ஆலுக்காஸ், மேலமாசி வீதி, மதுரை, மாலை 5:00 மணி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us