/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மஹாபெரியவர் ஆராதனை ஜன.5ல் துவக்கம்
/
மஹாபெரியவர் ஆராதனை ஜன.5ல் துவக்கம்
ADDED : ஜன 03, 2024 06:37 AM
மதுரை: மதுரை காஞ்சி காமகோடி மடத்தில் மஹா பெரியவர் 30வது வார்ஷிக ஆராதனை ஜன.,5 துவங்கி 4 நாட்கள் நடக்கிறது. ஜன.5 அன்று காலை 7:30 மணிக்கு குரு வந்தனம், விக்னேஸ்வர பூஜை, சங்கல்பத்துடன் விழா துவங்குகிறது.
தினமும் காலை 8:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை, மாலை 4:30 முதல் 5:30 வரை, இரவு 6:00 முதல் 7:00 வரை ரிக், யஜூர், சாம, அதர்வண வேத பாராயணங்கள் நடக்கின்றன. மஹாபெரியவர் விக்ரகத்திற்கு புஷ்பாஞ்சலி, தீபாராதனை நடக்கும்.
ஜன.8 காலை 7:00 மணி முதல் வார்ஷிக ஆராதனை துவங்குகிறது. மஹாபெரியவர் விக்ரகத்திற்கு அபிேஷகம், ஆராதனையை தொடர்ந்து அன்னதானம் வழங்கப்படுகிறது. மாலை 6:30 மணிக்கு குருமகிமை என்ற தலைப்பில் இந்திரா சவுந்தரராஜன் பேசுகிறார். ஏற்பாடுகளை ஸ்ரீ மடம் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.