/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மகாத்மா ஹவுசிங் நிறுவனத்தின் புதிய குடியிருப்பு திட்டம் துவக்கம்
/
மகாத்மா ஹவுசிங் நிறுவனத்தின் புதிய குடியிருப்பு திட்டம் துவக்கம்
மகாத்மா ஹவுசிங் நிறுவனத்தின் புதிய குடியிருப்பு திட்டம் துவக்கம்
மகாத்மா ஹவுசிங் நிறுவனத்தின் புதிய குடியிருப்பு திட்டம் துவக்கம்
ADDED : ஜன 19, 2025 05:14 AM
மதுரை: மதுரை கீழமாத்துாரில் மகாத்மா ஹவுசிங் நிறுவனம் சார்பில் 'மகாத்மாஸ் எம்.எஸ்.பி., வில்லாஸ்' எனும் புதிய குடியிருப்புகளுக்கான கட்டுமானப் பணிகள் இன்று துவங்குகிறது.
கட்டுமானத் துறையில் 15 ஆண்டுகளாகதடம் பதித்துள்ள இந்நிறுவனம், நகர் பகுதியில் நுாற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகளை கட்டிய அனுபவம் பெற்றது. தற்போது கீழமாத்துாரில்ஒரு ஏக்கர் பரப்பில் வெளிநாட்டு தொழில்நுட்ப கட்டடக் கலையுடன் புதிய குடியிருப்புகள் அமையவுள்ளன.
தலைமைநிர்வாகி மணிசெல்வம், தலைமை பொறியாளர் ஹரீஷ் கூறியதாவது: காற்றோட்டத்துடன், பசுமை நிறைந்தஅமைதியான சூழலில் 2, 3, 4படுக்கை வசதி கொண்ட சொகுசுவில்லாக்கள் கட்டப்படுகின்றன. வங்கிக் கடன் வசதி உண்டு. 24 மணிநேர சி.சி.டி.வி., பாதுகாப்பு, மின்சார பேக்கப், தெரு விளக்கு, குழந்தைகளுக்கான மைதானம், 'மாடுலர்' கிச்சன், பூஜை அறை, கப்போர்டு, 300 அடிக்கு நிலத்தடி நீர் உள்ளிட்ட வசதிகளுடன்தரமான கட்டுமானப் பொருட்கள் கொண்டு வீடுகள் கட்டப்படுகின்றன என்றனர்.
வீடுகளின் விலை ரூ.63 லட்சம்முதல் ஆரம்பமாகிறது. இன்று முன்பதிவு செய்பவர்களுக்கு ஒரு பவுன் தங்கக்காசு இலவசம். முன்பதிவு செய்ய 80157 50500, 80157 40400.

