ADDED : மார் 19, 2026 04:33 AM
அ நிறம் | அளவு
சோழவந்தான்: முள்ளிப்பள்ளம் காஞ்சி காமகோடி பீடத்தில் பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் 58 வது ஜெயந்தி மகோத்ஸவம் நடந்தது.
புண்யகாவாசனம்,கோபூஜை, குருவந்தனம், கணபதி, நவக்கிரஹ, ஆவஹந்தி, ஆயுஷ், ம்ருத்யஞ்சய ஹோமங்கள் நடந்தன. அன்னதானம் வழங்கப்பட்டது. நிர்வாகி ஸ்ரீகுமார், வெங்கட்ராமன், வீரமணிகண்டன், முத்துப்பாண்டி, நடராஜன் ஆகியோர் ஏற்பாடுகளை செய்தனர்.
