தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மானிய விலையில் மக்காச்சோளம்

மானிய விலையில் மக்காச்சோளம்

மானிய விலையில் மக்காச்சோளம்


ADDED : ஆக 17, 2026 07:22 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 17, 2026 07:22 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மதுரை மாவட்ட மக்காச்சோள விவசாயிகளுக்கு தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டம், தேசிய உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து இயக்ககத்தின் கீழ் மக்காச்சோள விதைகள் மானியத்தில் வழங்கப்படுகிறது.

மதுரையில் திருமங்கலம், சேடப்பட்டி, கள்ளிக்குடி, டி.கல்லுப்பட்டி, உசிலம்பட்டி, செல்லம்பட்டி, அலங்காநல்லுார் வட்டாரங்களில் 22 ஆயிரம் எக்டேரில் மக்காச்சோளம் சாகுபடியாகிறது. கூடுதலாக 870 எக்டேர் அதிகரிக்க விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் செயல்விளக்கத் திடல் அமைக்க ரூ. ஒரு கோடியும், இடுபொருள் விநியோகத்திற்கு ரூ.37.50 லட்சமும் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஒரு விவசாயிக்கு ஒரு எக்டேருக்கான 15 கிலோ விதைகள், 12.5 கிலோ நுண்ணுாட்டக் கலவை, ஒரு லிட்டர் திரவ உயிர் உரம், 15 கிலோ பயிர் வளர்ச்சி ஊக்கி, 4 கிலோ உயிரியல் பூச்சிக்கொல்லி என, ரூ.11ஆயிரத்து 500 மதிப்புள்ள இடுபொருட்கள் மானியத்தில் வழங்கப்படுறது.

ஆதார் அட்டை நகல், சிட்டா நகல், ஆவணங்களுடன் வேளாண் விரிவாக்க மையங்களை விவசாயிகள் அணுகி பயன்பெறலாம் என வேளாண் துறை இணை இயக்குநர் ராணி தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us