ஆளும்கட்சி எம்.எல்.ஏ., தொகுதியாக மாற்றுங்கள்: மதுரை மேற்கு தொகுதி தி.மு.க., வேட்பாளர் பாலாஜி பிரசாரம்
ஆளும்கட்சி எம்.எல்.ஏ., தொகுதியாக மாற்றுங்கள்: மதுரை மேற்கு தொகுதி தி.மு.க., வேட்பாளர் பாலாஜி பிரசாரம்
ADDED : ஏப் 11, 2026 04:46 PM

மதுரை: மீண்டும் தி.மு.க., ஆட்சியே தொடரும். இதனால் மேற்கு தொகுதியை ஆளுங்கட்சி எம்.எல்.ஏ., தொகுதியாக மக்கள் மாற்ற வேண்டும் என தி.மு.க., வேட்பாளர் பாலாஜி பிரசாரம் செய்தார்.
மேற்கு தொகுதிக்கு உட்பட்ட பரவை பேரூராட்சியின் பவர்கவுஸ், ஊர்மெச்சிகுளம், காந்திநகர், எம்ஜி.ஆர்., நகர், பூங்கா நகர் உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் செய்தார். பெண்கள் அவருக்கு ஆரத்தி எடுத்தும் பூ துாவியும் வரவேற்றனர்.
பாலாஜி பேசியதாவது: முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான ஐந்தாண்டு ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களும் பயன் பெற்றுள்ளனர். தி.மு.க., கொள்கையால் இளைஞர்கள் அதிகம் ஈர்க்கப்பட்டு வருகின்றனர். அரசு துறைகளில் மட்டுமின்றி தனியார் துறைகளிலும் வேலைவாய்ப்புகளை தி.மு.க., அரசு ஏற்பாடு செய்து தருகிறது. இதுபோன்ற திட்டங்கள் தொடர தி.மு.க., ஆட்சி தொடர வேண்டும்.
மதுரை மேற்கு தொகுதியை தொடர்ந்து 3 முறை அ.தி.மு.க., தக்க வைத்துள்ளது. ஆனால் தொகுதியில் குறிப்பிடும் வகையில் எந்த பெரிய திட்டங்களும் நடக்கவில்லை. இத்தொகுதி மாவட்ட செயலாளராக அமைச்சர் மூர்த்தி பொறுப்பேற்ற பின் தான் புதிய ரோடுகள், ரேஷன் கடைகள், ரூ.பல கோடியிலான நலத்திட்டங்களை மக்கள் பெற்றுள்ளனர்.
தி.மு.க., ஆட்சி தொடரும்போது, ஆளும்கட்சி எம்.எல்.ஏ., தொகுதியாக மேற்கு மாறினால் மக்களுக்கான திட்டங்கள் தடையின்றி கிடைக்கும். இதை மனதில் வைத்து இத்தொகுதியை தி.மு.க.,வில் போட்டியிடும் என்னை வெற்றி பெறச் செய்யுங்கள் என்றார்.
