ADDED : செப் 03, 2026 06:52 PM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை கோமதிபுரத்தில் தென்றல் நகர் குடியிருப்போர் சங்கம் சார்பில், வீடுகளில் மக்கா குப்பை சேகரிக்கப்பட்டது.
500 கிலோ குப்பை சேகரிக்கப்பட்டு மறுசுழற்சிக்காக விருதுநகர் குப்பை வங்கிக்கு அனுப்பப்பட்டது. துாய்மைப் பணியாளர்களிடம் மக்கும், மக்கா குப்பை என தரம்பிரித்து வழங்க குடியிருப்போரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. சங்கத் தலைவர் ராகவன், செயலாளர் ரகுபதி, செயற்குழு உறுப்பினர்கள் காளிமுத்து, அபுபக்கர், சமூக ஆர்வலர் மகாமாயன் ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
