/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் ஜல்லிக்கட்டில் முறைகேடு?
/
கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் ஜல்லிக்கட்டில் முறைகேடு?
கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் ஜல்லிக்கட்டில் முறைகேடு?
கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் ஜல்லிக்கட்டில் முறைகேடு?
ADDED : ஜன 30, 2024 07:26 AM

மதுரை : மதுரை மாவட்டம் கீழக்கரையில் கலைஞர் நுாற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தை சமீபத்தில் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். அன்றைய தினம் 500 காளைகள் களத்தில் இறக்கி விடப்பட்டு, 300 வீரர்கள் அவற்றை அடக்க பாய்ந்தனர். வீரர்கள் பலரும், காளையர் பலவும் வெற்றி பெற்று பரிசுகளை அள்ளினர்.
வீரர்களில் முதல் பரிசு பெற்றவருக்கும், சிறப்பாக விளையாடிய காளையின் உரிமையாளருக்கும் கார் பரிசு வழங்கப்பட்டது. தற்போது இதில் முறைகேடாக அறிவித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
களத்தில் நன்கு விளையாடிய காளைக்கு மூன்றாவது பரிசு வழங்கியதாக மதுரை ஜல்லிக்கட்டு பயிற்சி மைய நிறுவனர் மணிகண்ட பிரபு புகார் தெரிவித்துள்ளார்.
நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு காளையாட்ட கலைஞர் உட்பட சிலருடன் வந்தார். அவருடன் வந்த பெண்கள் ஒப்பாரி வைத்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.
மணிகண்ட பிரபு கூறியதாவது: கலைஞர் ஏறுதழுவுதல் அரங்கில் நடந்த போட்டியில் வீரபாண்டி வினோத்ராஜ் என்பவரின் ஜெட்லி என்ற காளை மிகவும் சிறப்பாக விளையாடி பலரது பாராட்டை பெற்றது.
அதன்பின் அவிழ்த்த எந்த ஒரு காளையும் இதைப் போல களமாடவில்லை. முதல் பரிசு கிடைக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் மூன்றாம் பரிசை அறிவித்தனர்.
விழா குழுவிடம் கேட்டபோது பதிலளிக்க மறுத்தனர். இந்நிலையில் இதில் அரசியல் இருக்கிறது என சிலர் தெரிவித்ததால் அதிர்ச்சி அடைந்தோம். எங்களுக்கு கார் வேண்டும் என்பதற்காக கூறவில்லை. எங்கள் காளை நன்கு விளையாடியது என்ற பேர்தான் வேண்டும்.
வெற்றி பெற்ற காளையை ஏன் திரையில் காட்டவில்லை. அதற்கு எப்படி பரிசு வழங்கினர். நாங்கள் பண்பாடு, பாரம்பரியத்தை பாதுகாக்க வந்துள்ளோம். இவ்வாறு கூறினார்.