ADDED : மே 17, 2026 03:43 AM
அ நிறம் | அளவு
சென்னை: ஓட்டேரி, திடீர் நகர் பகுதியைச் சேர்ந்தவர்முயல் காது அப்பு, 34.சில நாட்களுக்கு முன், உடம்பில் போதை ஊசி செலுத்தியதால் மயங்கி கிடந்தார்.
தகவலறிந்த தலைமை செயலக குடியிருப்பு போலீசார், அப்புவை மீட்டு, அப்பகுதி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, 10 நாட்கள் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பிய அப்பு, போதை ஊசியை மீண்டும் செலுத்தி, அப்பகுதியினரிடம் தகராறில் ஈடுபட்டார். போலீசார் வழக்கு பதிவு செய்து, அப்புவை நேற்று கைது செய்தனர்.
