/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரையில் அரசு இடத்தை விற்க முயற்சி ரூ.32 லட்சம் மோசடி செய்தவர் கைது
/
மதுரையில் அரசு இடத்தை விற்க முயற்சி ரூ.32 லட்சம் மோசடி செய்தவர் கைது
மதுரையில் அரசு இடத்தை விற்க முயற்சி ரூ.32 லட்சம் மோசடி செய்தவர் கைது
மதுரையில் அரசு இடத்தை விற்க முயற்சி ரூ.32 லட்சம் மோசடி செய்தவர் கைது
ADDED : ஜன 11, 2025 05:09 AM
மதுரை : மதுரையில் வீட்டு வசதி வாரிய இடத்தை விற்பதாக கூறி ரூ.32 லட்சம் மோசடி செய்த வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
மதுரை திடீர்நகர் கணேசன் 67. தங்கும் விடுதி ஒன்றின் மேலாளர். இங்கு சிவகாசி நந்தவனத்தை சேர்ந்த சரவணன் 46, என்பவர் தன்னை வக்கீல் எனக்கூறிக்கொண்டு அடிக்கடி வந்து தங்கினார். தனக்கு பல அதிகாரிகளை தெரியும் எனக்கூறியவர், மதுரை வில்லாபுரம் ஹவுசிங் போர்டில் வீட்டு வசதிவாரிய கட்டுப்பாட்டில் உள்ள 6 சென்ட் இடத்தை குறைந்த விலைக்கு வாங்கித் தருவதாக ஆசைவார்த்தை கூறினார். அரசு இடம் என்பதால் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு பணம் கொடுக்க வேண்டும் என்றார். அதை நம்பி ரூ.42 ஆயிரம் கணேசன் கொடுத்தார்.
இந்நிலையில் சரவணன் ஏற்பாட்டில் சர்வேயர் எனக்கூறிக்கொண்டு கணேசனை தொடர்பு கொண்ட பிரசன்னா, சசிகுமார் பல்வேறு கட்டமாக மொத்தம் ரூ.32 லட்சம் பெற்றனர். இடத்தை வாங்கித்தராமல் சரவணன் மோசடி செய்தார். இதுகுறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசில் கணேசன் புகார் அளித்தார். இவ்வழக்கில் சரவணன் கைது செய்யப்பட்டார். மற்ற இருவரை தேடி வருகின்றனர். சரவணனிடமிருந்து போலி 'சீல்', பச்சை மை உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர்.
போலீசார் கூறுகையில், 'மோசடிக்கு காரணமான இடம் வீட்டுவசதிவாரியத்திற்கு சொந்தமானதா, சரவணன் வக்கீலா, பிரசன்னா சர்வேயரா உள்ளனரா என விசாரித்து வருகிறோம்,' என்றனர்.

