ADDED : மார் 13, 2026 05:41 AM
அ நிறம் | அளவு
சோழவந்தான்: விக்கிரமங்கலம் பகுதியில் அளவுக்கதிக போதைப்பொருள் பயன்பாடால் வாலிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கல்புளிச்சான்பட்டி விவசாயி நாகராஜ் மகன் தீபக் 22, அளவுக்கு அதிகமாக மது அருந்தியதில் போதை தலைக்கேறி விக்கிரமங்கலம், செக்கானுாரணி ரோட்டில் அமைந்த உண்டாங்கல் மலையில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். அப்பகுதி இளைஞர்கள் பலர் போதை பழக்கங்களுக்கு அடிமையாகி வருகின்றனர்.
இதனால் பலர் வேலைக்கு செல்லாமல் வாழ்க்கையை வீணடித்து வருவதாக அப்பகுதியினர் வேதனை தெரிவித்தனர். போதைப்பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலி யுறுத்தினர்.
