தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மண்டலாபிஷேகம் 

மண்டலாபிஷேகம் 

மண்டலாபிஷேகம் 


ADDED : ஆக 25, 2025 02:37 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 25, 2025 02:37 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உசிலம்பட்டி : உசிலம்பட்டி அருகே நாலுகரை புத்துாரில் பழமையான சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளது. கோயிலில் உள்ள சுப்பிரமணியர் போருக்குச் செல்லும் கோலத்தில் காலில் தண்டை, பாதரட்சை, இடுப்பில் கத்தி அணிந்து காட்சியளிக்கிறார்.

இக்கோயிலில் ஹிந்து சமய அறநிலையத்துறையினர் ரூ. 8 லட்சம் நிதியுதவியுடன் புனரமைப்பு பணிகளை மேற்கொண்டனர். 19 ஆண்டுகளுக்கு பின் ஜூலை 7 ல், கும்பாபிஷேகம் நடந்தது.

நாற்பத்தெட்டு நாட்கள் மண்டல பூஜைகள் நிறைவு பெற்று, நேற்று காலை மண்டலாபிஷேகம் நடந்தது. யாகசாலை வழிபாட்டுக்குப்பின் புனிதநீரால் சுப்பிரமணியர் வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம், அன்னதானம் நடந்தது. அய்யப்பன் எம்.எல்.ஏ., உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us