ADDED : டிச 30, 2024 07:01 AM

அ நிறம் | அளவு
திருப்பரங்குன்றம்: மதுரை ஹார்விபட்டி சந்திரா பாளையம் தர்மசாஸ்தா கோயிலில் 55வது ஆண்டு மண்டல பூஜை, 36வது ஆண்டு தீ மிதித்தல் நிகழ்ச்சி, கன்னி பூஜை, பால்குடம் உற்ஸவம் நடந்தது. மூலவருக்கு அபிஷேகம், பூஜை முடிந்து சந்தனக்காப்பு, வெள்ளிக்கவசம், கருப்பண சுவாமிக்கு சந்தனக் காப்பு சாத்துப்படியாகி தீபாராதனை நடந்தது.
கன்னி பூஜை முடிந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கோயில் நிர்வாகிகள் திருவிழா ஏற்பாடுகள் செய்தனர்.
