தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/மதுரையை ஆளும் 'மங்கையர்க்கரசிகள்'

மதுரையை ஆளும் 'மங்கையர்க்கரசிகள்'

மதுரையை ஆளும் 'மங்கையர்க்கரசிகள்'


ADDED : மார் 08, 2024 01:15 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 08, 2024 01:15 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கலெக்டர் சங்கீதா


தென்காசி மாவட்டம் திப்பணம்பட்டியைச் சேர்ந்தவர். குரூப் 1 தேர்வில் வென்று வணிகவரித்துறையில் இணை கமிஷனராக பணியாற்றினார். முன்னதாகதிருவள்ளூர் மாவட்டத்தில் ஆர்.டி.ஓ., துாத்துக்குடி மாவட்ட பொது வினியோக அலுவலர், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையில் இயக்குனர்,அரசின் டாம்ப்கால் நிறுவனத்தில் பொது மேலாளர், கலால்துறை துணை கமிஷனர், உயர்கல்வித்துறை துணை செயலாளர், பொது வினியோகத்துறை இணை மேலாண்மை இயக்குனர் என பல பொறுப்புகளை வகித்து மதுரை கலெக்டராக உள்ளார்.

கலெக்டராக பொறுப்பேற்றதும் வாடிப்பட்டியில் ரோடு பணிகளை ஆய்வு செய்து தரமற்ற சாலையை அமைத்த ஒப்பந்ததாரரை கண்டித்து உடனே ரோட்டை மாற்றி அமைக்க உத்தரவிட்டார். வலையங்குளம் பகுதியில் போலி டாக்டரை கையோடு பிடித்து கைது செய்ய உத்தரவிட்டார். இவர் பொறுப்பேற்ற பின்பே, கலைஞர்

நுாற்றாண்டு நுாலகம், அலங்காநல்லுாரில் ஜல்லிக்கட்டு அரங்க பணிகள் முடிந்து திறப்பு விழா கண்டன. பணியில் கண்டிப்பு காட்டும் கலெக்டர் சங்கீதாவுடன், ஊழியர்கள் சிலர் முரண்பட்டாலும் பிரச்னைகளை லாவகமாக கையாள்கிறார். அரசியல் வில்லங்கம் எதிலும் சிக்காமல் திறம்பட பணியாற்றி வருகிறார்.

கூடுதல் கலெக்டர் மோனிகா ராணா


2018ல் ஐ.ஏ.எஸ்., பணிக்கு வந்த மோனிகா ராணா ஊட்டியில் சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்ட இயக்குனராக பொறுப்பேற்றார். அங்கு மக்களிடையே நல்ல பெயர் பெற்ற இவர், மதுரையில் கூடுதல் கலெக்டராக ஊரக வளர்ச்சித்துறையில் திட்ட இயக்குனராக பொறுப்பேற்றார். அமைச்சர், உயரதிகாரிகளுடன் நலத்திட்ட உதவி வழங்கும் விழாக்களில் சுறுசுறுப்பாக செயல்படுகிறார். தினமும் ஏதாவது ஒரு ஒன்றியத்தில் ஆய்வு செய்தபடி துடிப்புடன் நிர்வாகம் செய்கிறார்.

மதுரை ஆர்.டி.ஓ., ஷாலினி


கோவை மாவட்டம் காரமடையை சேர்ந்த பி.எஸ்சி., விவசாய பட்டதாரியான ஷாலினி, குரூப் 1 தேர்வில் வென்று, போலீஸ் டி.எஸ்.பி.,யாக பயிற்சி பெற்றார். பயிற்சி முடியும் முன்பே துணை கலெக்டராக விருதுநகரில் பணியேற்றார்.

ஓராண்டுக்கு பின்னர் மதுரை ஆர்.டி.ஓ.,வாக பொறுப்பேற்றார். ஆதரவற்ற விதவைகளுக்கு ஆதரவளிக்க அவர்களை தேடிப்பிடித்து சான்று கொடுத்து, அவர்களுக்கும், வாரிசுகளுக்கும் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு, பயிற்சி அளித்து உதவுகிறார். முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கும் வெள்ளிக்கிழமை தோறும் சிறப்பு முகாம் நடத்தி உடனுக்குடன் உதவிகள் கிடைக்க ஏற்பாடு செய்கிறார்.

மகன், மகள்கள் உதவ மறுத்தால் இறுதிகாலத்தில் சிரமப்படும் பெற்றோர்களின் புகார் மீது உடனடி நடவடிக்கை எடுத்து வயதானோரை பாதுகாக்க முயற்சி மேற்கொண்டார். அலுவலகம் வரும் பொதுமக்கள், மாற்றுத்திறனாளிகளுக்கும் இருக்கை, கழிவறை, சாய்வுதள வசதிகளை ஏற்படுத்தினார். வாடிப்பட்டி செங்கல் சூளை பணியாளர்களுக்கு காப்பீடு வசதி ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்.

மேலுார் ஆர்.டி.ஓ., ஜெயந்தி


28 ஆண்டுகளுக்கு முன் விருதுநகரில்அலுவலராக பணியேற்றார். பின்னர் சென்னை, சேலம், திருப்பூர் மாவட்டங்களில் வருவாய் துறையில் பல்வேறு பதவிகளை வகித்தார். 2023 முதல் மேலுார் ஆர்.டி.ஓ.,வாக பணியாற்றி வருகிறார். சட்டம் ஒழுங்கு பிரச்னைகளில் கூடுதல் கவனம் செலுத்தும் இவர், சம்பவஇடங்களுக்கு நேரில் சென்று தீர்வு காண்கிறார்.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் எவ்வித அசம்பாவிதமும் ஏற்படாமல் முறைப்படி நடத்தினார். மக்களுடன் முதல்வர் முகாம்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மனுக்களை பெற்று நடவடிக்கை எடுத்துள்ளார். நீண்ட நாட்களாக சான்றுகள், பட்டாக்கள் கிடைக்காதவர்களுக்கு பாகுபாடின்றி வழங்க நடவடிக்கை மேற்கொண்டார். பொதுமக்கள் எளிதில் அணுகி தீர்வு காணும் வகையில் செயல்படுவது இவரது சிறப்பு.

முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா


கடலுார் மாவட்டம் காட்டுமன்னார்குடி கண்டமங்கலத்தை சேர்ந்தவர். 2009 முதல் 2017 வரை விழுப்புரத்தில் ஆசிரியர் பயிற்றுநர். 2017ல் குரூப் 1 தேர்வில் வென்று திருவண்ணாமலை செய்யாறு கல்வி மாவட்ட அலுவலர்.பின் கள்ளக்குறிச்சியில் பணியாற்றியஇவர், 2022 ஜூனில் மதுரையில் சி.இ.ஓ.,வாக பொறுப்பேற்றார்.

மதுரையில் இல்லம் தேடி கல்வித்திட்டம் சிறப்பாக செயல்பட்டதற்காகமுதல்வர் ஸ்டாலின் கேடயம் வழங்கினார். எண்ணும் எழுத்தும் திட்டத்தில் நடந்த வார்த்தை மாரத்தான்செயல்பாட்டிலும் மதுரை சிறந்த மாவட்டமாக தேர்வு பெற்றது. மாநில அளவில் 2023ம் ஆண்டு கலைத் திருவிழாவை மதுரையில் நடத்தினார்.

சிறந்த கல்வி இணை செயல்பாட்டிற்காக மதுரை உட்பட 5 மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டு தென்கொரியாவுக்கு மதுரை மாணவர்கள் குழுவுடன் சென்று வந்தார். கடந்தாண்டு 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற 1500 அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு கேடயம், சான்றிதழ் வழங்கினார். இஸ்ரோவின் செயற்கை கோளுக்கு தேவையான சிப் உபகரணம் (ஸ்பேஸ் கிட்ஸ்) தயாரிப்பில் திருமங்கலம் அரசு பள்ளி மாணவர்கள் பங்கெடுக்க ஊக்குவித்தார்.

அரசு பள்ளிக்கு இரண்டு கட்டமாக ரூ.10 கோடி மதிப்பில் நிலம் தானம் வழங்கிய ஆயி என்ற பூரணம்மாளிடம் அதற்கான பத்திரத்தை கல்வித்துறை சார்பில் கார்த்திகா பெற்றார். சுறுசுறுப்புடன் பணியாற்றும் மதுரையின் கல்வித்துறை தலைவி இவர்.

வட்டார போக்குவரத்து அலுவலர் சித்ரா


சேலம் மாவட்டம்ஆத்துாரைச் சேர்ந்த இவர் மெக்கானிக்கல் இன்ஜினியர். 2005ல் வாகன ஆய்வாளராக பொறுப்பேற்ற இவர், திருப்பூர்உட்பட சில மாவட்டங்களில் பணியாற்றி, மதுரையில் வட்டார போக்குவரத்து அலுவலராக 2021 முதல் பணியாற்றுகிறார்.

சிறந்த பணிக்காக திருப்பூர் கலெக்டரிடம் விருது பெற்ற சித்ரா, பணிப்பளு நிறைந்த மதுரை மத்தி, வடக்கு என இரண்டு ஆர்.டி.ஓ., அலுவலகங்களை ஓராண்டுக்கும் மேலாக நிர்வகித்து வருகிறார்.

இன்னும் இவர்களைப் போல மாவட்ட கருவூல அலுவலர் சாந்தி, திருமங்கலம் ஆர்.டி.ஓ., சாந்தி, ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் செலின் செல்வி, மதுரை மெட்ரோ மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் சந்திரா என மாவட்ட உயர் பொறுப்புகளில் பெண்கள் கோலோச்சி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us