தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மதுரை புறப்பட்ட மாணிக்கவாசகர்

மதுரை புறப்பட்ட மாணிக்கவாசகர்

மதுரை புறப்பட்ட மாணிக்கவாசகர்


ADDED : ஆக 22, 2026 05:11 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 22, 2026 05:11 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மேலுார்: மதுரையில் நடந்து வரும் ஆவணி மூலத் திருவிழாவுக்காக திருவாதவூர் திருமறைநாதர் வேதநாயகி அம்பாள் கோயிலில் இருந்து புறப்பட்ட மாணிக்கவாசகர் மாலையில் மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலை அடைந்தார்.

இன்று ஆக. 23 ஆடி வீதி 16 கால் மண்டபத்தில் நரியை பரியாக்கிய திருவிளையாடல், ஆக. 24 ல் புட்டுத்தோப்பில், பிட்டுக்கு மண் சுமந்த திருவிழாவில் கலந்து கொள்கிறார்.

ஆக. 25 ல் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமியுடன், மாணிக்கவாசகர் கன்னிகா பரமேஸ்வரி மண்டபத்தில் எழுந்தருள்வார். ஆக. 26, ஆக. 27 ல் மீனாட்சி சுந்தரேஸ்வரருடன் திருவீதி உலா நடைபெறும். தொடர்ந்து ஆக.28 ல் விடைபெறும் மாணிக்கவாசகர் பல்வேறு மண்டகப்படிகளில் தங்கி பக்தர்களுக்கு அருள் பாலித்தவாறு, செப். 1 ல் கோயிலை வந்தடைவார். ஏற்பாடுகளை அறங்காவலர் குழுத் தலைவர் ருக்மணி, இணை ஆணையர் செல்லத்துரை, உதவி ஆணையர் மெய்வேல், பேஸ்கார் ஜெயப்பிரகாஷ் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us