ADDED : ஆக 16, 2026 06:00 PM
அ நிறம் | அளவு
மேலுார்: மேலுாரில் ‘வீ தி லீடர்ஸ்’ மற்றும் அண்ணாமலை இயக்கம் சார்பில் பசுமைப் புரட்சியை வலியுறுத்தி மாரத்தான் போட்டி நடந்தது.
இப் போட்டியை நிர்வாகி அனந்த ஜெயம் துவக்கி வைத்தார். பிளாஸ்டிக் பை பயன்பாட்டை தவிர்த்து அனைவரும் மஞ்சப்பை பயன்படுத்த வலியுறுத்தியும், இப்பகுதியை பசுமையாக மாற்றவும் உறுதிமொழி எடுத்தனர்.
மேலுார் அரசு இருபாலர் பள்ளியில் துவங்கிய மாரத்தான் போட்டியில் நுாற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் பள்ளியை அடைந்தது. வென்ற மாணவர்களுக்கு பரிசு, சான்றிதழ், மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
