ADDED : டிச 17, 2024 04:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அழகர்கோவில்: அழகர்கோவில் கள்ளழகர் கோயில் திருக்கல்யாண மண்டபத்தில், மார்கழி மாதப் பிறப்பை முன்னிட்டு நேற்று (டிச.16) முதல் 'மார்கழி இசைச் சங்கமம்' நிகழ்ச்சி துவங்கியது.
அறங்காவலர் குழு உறுப்பினர் செந்தில்குமார், பாண்டியராஜன், அறங்காவலர் குழு தலைவர் பிரதிநிதி நல்லதம்பி, உள்துறை கண்காணிப்பாளர் பிரதீபா, பி.ஆர்.ஓ., முருகன் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர்.
முதல் நாளான நேற்று கோயில் வாத்தியக் குழுவின் மங்கள இசையுடன் துவங்கியது. சுதர்சனின் உபன்யாசம், ஜாஸ்மின் நடனக் குழுவின் பரதநாட்டியம் நடந்தன. ஜன. 13 வரை தினமும் இந்நிகழ்ச்சி நடக்கிறது.

