தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மார்க்சிஸ்ட் கம்யூ., மனு

மார்க்சிஸ்ட் கம்யூ., மனு

மார்க்சிஸ்ட் கம்யூ., மனு


ADDED : டிச 27, 2024 05:09 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 27, 2024 05:09 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மதுரையில் குடிநீர், ரோடு பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும் என மாநகராட்சி கமிஷனர் தினேஷ்குமாரிடம் துணைமேயர் நாகராஜன் தலைமையில் மார்க்சிஸ்ட் கம்யூ., நிர்வாகிகள் மனு அளித்தனர்.

அதில், 'மாநகராட்சி 56, 58, 49, 63, 64 உள்ளிட்ட பெரும்பாலான வார்டுகளில் குடிநீரில் செம்மண் கலந்து வருகிறது. சுகாதாரமற்ற குடிநீரால் நோய் தொற்று ஏற்பட்டு வருகிறது. இதுபோல் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் (அம்ருத்) பல வார்டுகளில் புதிய குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் நடந்து வருகிறது. குடிநீர் குழாய் பதித்து முடிவடைந்த பகுதிகளில் தோண்டப்பட்ட ரோடுகளை சரி செய்யாமல் குண்டும் குழியுமாக கிடக்கின்றன. விபத்து நடக்க காரணமாக உள்ளது. இதை சீரமைக்க வேண்டும்' என வலியுறுத்தப்பட்டது.

மாவட்ட செயலாளர் கணேசன், நிர்வாகிகள் ஸ்டாலின், லெனின் உள்ளிட்டோர் உடனிருந்தனர். விரைவில் நடவடிக்கை எடுப்பதாக கமிஷனர் உறுதியளித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us