தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ 'மேக்ஸ் சத்யா அப்பார்ட்மென்ட்' துவக்கம்

 'மேக்ஸ் சத்யா அப்பார்ட்மென்ட்' துவக்கம்

 'மேக்ஸ் சத்யா அப்பார்ட்மென்ட்' துவக்கம்


ADDED : செப் 15, 2026 01:15 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 15, 2026 01:15 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மதுரை: மதுரையில் மேக்ஸ் பிராப்பர்டீஸ் நிறுவனத்தின் புதிய திட்டமான 'மேக்ஸ் சத்யா' அப்பார்ட்மென்ட் துவக்க விழா நேற்று நடந்தது.

மதுரை பெருங்குடி தி ரெசிடென்சி சிக்னேச்சர் ஓட்டல் எதிரே இத்திட்டத்தை, ருசில் டெக்கார் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி கேயூர் கஜ்ஜார் துவக்கி வைத்தார்.

தேனி பிளைவுட் நிறுவன ராஜசேகர் முன்னிலை வகித்தார். மேக்ஸ் பிராப்பர்டீஸ் இயக்குநர் ராமகிருஷ்ணா நன்றி தெரிவித்தார்.

நவீன குடியிருப்புகள் மேக்ஸ் சத்யா திட்டத்தில் நவீன வசதிகளுடன் கூடிய 2 பி.எச்.கே., 3 பி.எச்.கே., என மொத்தம் 24 குடியிருப்புகள் அமைக்கப்பட உள்ளன. குடும்பங்களின் வசதியை கருத்தில் கொண்டு, காற்றோட்டம், வெளிச்சம் மற்றும் நவீன வாழ்க்கை முறைக்கு ஏற்ப 5 தளங்களுடன் குடியிருப்புகள் அமையவுள்ளன. தரைத்தளத்தில் 7500 சதுர அடி பரப்பளவில் வர்த்தக வசதிகளும், மற்ற தளங்களில் குடியிருப்புகளும் அமைக்கப்பட உள்ளன. விமான நிலையத்திற்கு அருகே உள்ளதுடன், முக்கிய ரோடுகள், நகரின் பல்வேறு பகுதிகளுக்கும் எளிதில் செல்லும் இடமாகவும் அமைந்துள்ளது. சொந்த வீடு விரும்புவோர், முதலீட்டு நோக்கில் வாங்க நினைப்போருக்கும் ஏற்ற வகையில் திட்டம் உருவாகிறது.

துவக்க விழா சிறப்பு சலுகையாக ரூ.83.37 லட்சம் முதல் குடியிருப்புகள் விற்பனைக்கு உள்ளன. துவக்க விழா சலுகையாக புக்கிங் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு கிலோ வெள்ளி வழங்கப்படும். வங்கிக் கடன் வசதியும் செய்து தரப்படுகிறது. விபரங்களுக்கு: 98731 30086ல் தொடர்புகொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us