ADDED : ஜன 01, 2024 05:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை தினமலர், ஆர்.எல். இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் ஸ்டடீஸ் (ஆர்.எல்.ஐ.எம்.எஸ்.,) சார்பில் எம்.பி.ஏ., நுழைவுத் தேர்வுக்கான (டான்செட்) பயிற்சி வகுப்பு மதுரைக் கல்லுாரியில் நடந்தது.
மதுரை காமராஜ் பல்கலை வணிக மேலாண்மை துறைத் தலைவர் சிவகுமார், நுழைவுத் தேர்வுக்கு எவ்வாறு தயாராவது என்பது குறித்து விளக்கினார்.
200க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். ஆர்.எல்.ஐ.எம்.எஸ்., எம்.பி.ஏ., துறைத் தலைவர் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.