/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கட்சித்தலைமை, நிர்வாகிகள் விரும்பினால் லோக்சபா தேர்தலில் போட்டியிடுவேன் சொல்கிறார் ம.தி.மு.க., துரை

ADDED : ஜன 15, 2024 05:14 AM
மதுரை ; கட்சி தலைமை, நிர்வாகிகள் விரும்பினால் லோக்சபா தேர்தலில் போட்டியிட நான் மறுப்பு சொல்ல முடியாது என, ம.தி.மு.க., முதன்மை செயலாளர் துரை தெரிவித்தார்.
மதுரையில் அவர் கூறியதாவது:
தேர்தலில் போட்டியிட விருப்பமின்றி என் கருத்தை தெரிவித்து வருகிறேன். 'கட்சிக்கு கூடுதல் பலம் கிடைக்கும், மக்களுக்கும் நீங்கள் கூறும் கருத்துக்கள் போய்சேரும், அதனால் நான் எம்.பி., ஆக வேண்டும்' என நிர்வாகிகள் விரும்புகின்றனர். அவர்கள் விரும்பினால் மறுக்க முடியாது. தேர்தல் கூட்டணி பேச்சு இன்னும் துவங்கவில்லை. வரும் லோக்சபா தேர்தலில் யார் வெற்றி பெற வேண்டும் என்பதை விட, யார் வெற்றி பெறக் கூடாது என்ற முதல்வர் ஸ்டாலின் இலக்கை தான் நாங்களும் பின்பற்றுவோம். இதையே கூட்டணி கட்சிகளும் பின்பற்ற வேண்டும்.
ஈழத் தமிழர்களுக்காக என் தந்தை 'பொடா'வில் கைதாகி சிறை சென்றார். இன்றும் ஈழத்தமிழர்கள் முகாம்களில்தான் உள்ளனர். அவர்கள் சுதந்திரமாக கருத்து சொல்ல முடியவில்லை. இதுதொடர்பாக இலங்கை அரசு, ராணுவத்தை ம.தி.மு.க., தொடர்ந்து கண்டிக்கிறது. அதேநேரம் மத்திய அரசு இலங்கைக்கு ரூ.கோடிக்கணக்கில் நிதியுதவி செய்கிறது. சீனாவை காரணம் காட்டி 30 ஆண்டுகளுக்கும் மேல் இந்தியாவிடம் இலங்கை சித்து விளையாட்டில் ஈடுபட்டு வருகிறது. அவர்கள் ஒருபோதும் திருந்த மாட்டார்கள். இந்தியாவிற்கு பாதுகாப்பு ஈழத்தமிழர்கள் மட்டுமே. மத்திய அரசு இதை புரிந்துகொள்ள வேண்டும்.
தமிழகத்தில் தற்போதுள்ள களஅரசியலுக்கு ஏற்ப நான் தயாராகிறேன். கட்சியை வலுப்படுத்த மக்கள் பிரச்னைகளை பேசும் இளைஞர்களை கட்சியில் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம் என்றார்.