ADDED : பிப் 20, 2026 05:34 AM

அ நிறம் | அளவு
மதுரை: மதுரையில் ம.தி.மு.க., சார்பில் மண்டல அளவில் தேர்தல் நிதியளிப்பு கூட்டம் எம்.எல்.ஏ., பூமிநாதன் தலைமையில் நடந்தது.
பொதுச் செயலாளர் வைகோ பேசுகையில், தேர்தல் நிதியாக தொழிலதிபர், நிறுவனங்களிடம் அல்லாமல் ம.தி.மு.க.,வை விரும்பும் மக்களிடம் மட்டும்தான் பெறுகிறோம் என்றார்.
நகர் செயலாளர் முனியசாமி வரவேற்றார். பொருளாளர் செந்தில் அதிபன், அவைத் தலைவர் அர்ஜூனராஜ் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர்கள் முனியாமி மார்நாடு, தொழிலாளர் பிரிவு மாநில நிர்வாகி மகபூப்ஜான் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மதுரை நகர் சார்பில் ரூ.52 லட்சம் உட்பட திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களை சேர்ந்தோர் ரூ.1.38 கோடி நிதி வழங்கினர்.
