/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மாற்றுத்திறன் மாணவர்களுக்கு மருத்துவ மதிப்பீட்டு முகாம் டிச. 8ல் துவக்கம்
/
மாற்றுத்திறன் மாணவர்களுக்கு மருத்துவ மதிப்பீட்டு முகாம் டிச. 8ல் துவக்கம்
மாற்றுத்திறன் மாணவர்களுக்கு மருத்துவ மதிப்பீட்டு முகாம் டிச. 8ல் துவக்கம்
மாற்றுத்திறன் மாணவர்களுக்கு மருத்துவ மதிப்பீட்டு முகாம் டிச. 8ல் துவக்கம்
ADDED : டிச 03, 2025 06:43 AM

மதுரை: மதுரையில் ஒருங்கிணைந்த கல்வித்திட்டம் சார்பில் நடத்தப்படும் மாற்றுத்திறன் மாணவர்களுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் டிச.,8 முதல் ஜன.,1 வரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் பள்ளிகளில் பயிலும் 1-17 வயதுள்ள மாற்றுத்திறன் மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டை வழங்குதல், புதுப்பித்தல், தனித்திறன் சான்று, உபகரணங்கள் வழங்குவதற்கான அளவீடு செய்தல் பணிக்காக இந்த மருத்துவ மதிப்பீட்டு முகாம் நடத்தப்படுகிறது.
இந்தாண்டு முகாம் நடத்துவதற்கான கல்வி, சுகாதாரம், மாற்றுத்திறன் நல, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி துறைகள், முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டுத் திட்டம் அலுவலர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் பிரவீன்குமார் தலைமையில் நடந்தது. சி.இ.ஓ., தயாளன் முன்னிலை வகித்தார்.
மாவட்ட மாற்றுத்திறன் நல அலுவலர் சுவாமிநாதன், மருத்துவ துறை இணை இயக்குநர் குமரகுரு, டி.இ.ஓ.,க்கள் செந்தில்குமார், கணேசன், ரகுபதி, மோகன் (மாநகராட்சி), உதவித் திட்ட அலுவலர் சரவணமுருகன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சூரியகலா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இம்முகாம் டிச.,8 முதல் ஜன., 9 வரை 15 கல்வி ஒன்றியங்களிலும் பள்ளிகளில் நடத்த முடிவு எடுக்கப்பட்டது. 1852 மாற்றுத்திறன் மாணவர்களை முகாம்களில் பங்கேற்க செய்ய கல்வித்துறைக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

