ADDED : பிப் 15, 2026 06:19 AM
அ நிறம் | அளவு
கொட்டாம்பட்டி: கொட்டாம்பட்டி வட்டார வளமையம் சார்பில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் கீழ் மேலுாரில் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ மதிப்பீடு முகாம் நடந்தது.
உதவி திட்ட அலுவலர் சரவணமுருகன், மாற்றுத்திறனாளி நல அலுவலர் சுவாமிநாதன் தலைமை வகித்தனர். மைய மேற்பார்வையாளர் ரவி கணேஷ், சிறப்பு பயிற்றுநர்கள் பாண்டி, பார்வதி பாய், இந்திரா, டேவிட்ராஜ், இயன்முறை மருத்துவர் கார்த்திகாதேவி கலந்து கொண்டனர்.
