ADDED : நவ 20, 2024 04:57 AM
அ நிறம் | அளவு
வாடிப்பட்டி : வாடிப்பட்டி அன்பே கடவுள் பார்வையற்றோர், மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு இல்லத்தில் பாலாஜி ஹோமியோ கிளினிக் சார்பில் இலவச மருத்துவ முகாம் நடந்தது.
தே.மு.தி.க., செயலாளர் பாலாஜி துவக்கி வைத்தார். மறுவாழ்வு மைய செயலாளர் ஆசைத்தம்பி வரவேற்றார். டாக்டர் பொன் யாழினி பார்வையற்றோர் மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ சிகிச்சை வழங்கினார். காப்பாளர் ராஜேஸ்வரி நன்றி கூறினார்.
