ADDED : ஜன 04, 2026 05:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: மேலுார் தெற்கு தெருவில் சுகாதாரத்துறை சார்பில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் நடந்தது.
மாவட்ட சுகாதார அலுவலர் டாக்டர் குமரகுரு பரன் தலைமை வகித்தார். வட்டார மருத்துவ அலுவலர் அம்பலம் சிவனேசன் முன்னிலை வகித்தார். நுாற்றுக்கும் மேற்பட்டோருக்கு 17 டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். முகாமில் காப்பீடு திட்ட பதிவு, மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு அங்கீகார சான்று, கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது.

