நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநகர் : தமிழ்நாடு மின் அமைப்பாளர் மத்திய சங்கம் திருநகர் கிளை, டாக்டர் ரஜினியின் ஹர்ஷினி மருத்துவமனை சார்பில் டாக்டர் சாவித்திரி தலைமையில் காது, மூக்கு, தொண்டை இலவச பரிசோதனை மருத்துவ முகாம் திருநகரில் நடந்தது.
தமிழ்நாடு மின் மத்திய சங்க மாநில அமைப்பு செயலாளர் யோகநாதன் தலைமை வகித்தார். மதுரை கிளை தலைவர் சுப்பிரமணியன், துணை தலைவர் மாதவன், செயலர் அபுதாஹீர், செயற்குழு உறுப்பினர், ரகுராஜன், திருநகர் தலைவர் செல்வம், துணைத் தலைவர் மணிகண்டன், பொருளாளர் ஆனந்த மூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.

