நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மக்கள் நீதி மய்யத்தின் 7ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு ரோட்டரி மிட் டவுனுடன் இணைந்து மதுரை மண்டல மகளிரணி சார்பில் கற்பகம் நகர் ஜெய்னி சிறப்பு பள்ளியில் மகளிருக்கான இலவச மருத்துவ முகாம் நடந்தது.
மாநில செயலாளர் மூகாம்பிகா துவக்கி வைத்தார். நிர்வாகிகள் பத்மா, கலையரசி, பத்மாவதி கலந்து கொண்டனர். இ.சி.ஜி., எக்கோ, ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் பரிசோதனை செய்யப்பட்டது.

