நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம், வேலம்மாள் மருத்துவமனை சார்பில் வர்த்தக சங்க ஹட்சன் பேரவை அரங்கில் தலைவர் ஜெகதீசன் தலைமையில் மருத்துவ முகாம் நடந்தது.
வேலம்மாள் கல்விகுழும தலைவர் முத்துராமலிங்கம் துவக்கி வைத்தார். மருத்துவ ஆலோசனைகள், இ.சி.ஜி. , அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், ரத்தம், கண் பரிசோதனைகள், பெண்கள் நல மருத்துவம் உள்ளிட்ட இலவச சிகிச்சை, மருந்துகள் வழங்கப்பட்டது. அனைத்துத் துறை சிறப்பு மருத்துவர்கள் ஆலோசனைகள் வழங்கினர். வர்த்தக சங்க நிர்வாகிகள் ஸ்ரீதர், செல்வம், பார்மா கணேசன், முருகேசன் பங்கேற்றனர்.

