ADDED : பிப் 29, 2024 05:36 AM
அ நிறம் | அளவு
வாடிப்பட்டி : மதுரை மேற்கு ஒன்றியம் சிறுவாலை ஊராட்சி கீழநெடுங்குளத்தில் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் சிறப்பு கால்நடை சுகாதாரம், விழிப்புணர்வு முகாம் நடந்தது.
கால்நடைகளை நன்கு பராமரித்தவர்களுக்கு உதவி இயக்குனர் பழனிவேல், நோய் புலனாய்வு உதவி இயக்குனர் கிரிஜா பரிசு வழங்கினர். உதவி டாக்டர்கள் முனியாண்டி, ஆறுமுகம் தலைமையில் கால்நடை ஆய்வாளர்கள் முருகையன், தேவி, உதவியாளர்கள் வாசு, வேல்முருகன், ஜெயதேவி ஆகியோர் பசுக்களுக்கு மலடு நீக்கம், கருவூட்டல் உள்ளிட்ட சிகிச்சை அளித்தனர்.
