ADDED : மே 12, 2025 05:54 AM
அ நிறம் | அளவு
மதுரை:மதுரை ஏ.என்.டி., கல்வி மருத்துவம், சமூக மேம்பாட்டு அறக்கட்டளை சார்பில் அ. கொக்குளத்தில் இலவச பொது, கண், காது பரிசோதனை முகாம் நடந்தது.
அறக்கட்டளை தலைவர் ஜெயராஜசேகர் தலைமை வகித்தார். பாண்டியன் மருத்துவமனை, வாசன் கண் மருத்துவமனை,இன்னிசை மையம் டாக்டர்கள் குழு பரிசோதனை செய்தனர். 100 க்கும் மேற்பட்ட மக்கள் பரிசோதனை செய்தனர். பொருளாளர் திருவேங்கடராமனுஜம், செயலாளர் பாண்டிச்செல்வி, காமராஜ் பல்கலை மாணவர்கள் முத்துக் கண்ணன், தருண், கரண் குமார் பங்கேற்றனர்.
