நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம்: மதுரை சவுராஷ்டிரா கல்லுாரி, மகளிர் கல்லுாரி, குரு மருத்துவமனை சார்பில் பெண்களுக்கான இதயம் மற்றும் புற்றுநோய் மருத்துவ முகாம் நடந்தது. தலைவர் பன்ஷிதர் தலைமை வகித்தார். நிர்வாக குழு உறுப்பினர் வெங்கடேஸ்வரன் முன்னிலை வகித்தார். முதல்வர் ஸ்ரீனிவாசன் வரவேற்றார்.
டாக்டர்கள் பாலமுருகன், கல்பனா, ராஜசேகர், குப்புசாமி பேசினர். மகளிர் கல்லுாரி முதல்வர் பொன்னி நன்றி கூறினார். 500க்கும் மேற்பட்ட மாணவியருக்கு இலவச பரிசோதனை செய்யப்பட்டது.

