ADDED : டிச 13, 2025 06:21 AM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரியில் இலவச மருத்துவ முகாம் நடந்தது. முதல்வர்(பொறுப்பு) ராஜேஸ்வர பழனிசாமி முகாமைத் துவங்கி வைத்தார்.
உதவிப்பேராசிரியர் கண்ணன் வரவேற்றார். டாக்டர்கள் சுரேந்திர பிரகாஷ், நதியா தலைமையிலான மருத்துவக் குழுவினர் மருத்துவ ஆலோசனை வழங்கினர். நாட்டு நலப்பணித் திட்ட அதிகாரிகள் தீபா, சுப விவேகா பங்கேற்றனர். வேல் மருத்துவமனை, வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி ஏற்பாடு செய்திருந்தன.
