ADDED : ஆக 05, 2026 03:45 AM
வாடிப்பட்டி: சானாம்பட்டியில் உள்ள பதினெண் சித்தர் பீடத்தில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு சித்தர் முறைப்படி யாகமும், கருப்பசாமி பீடம் மற்றும் பதினெண் சித்தர் பீடத்திற்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
பூஜைகளை சித்தர் பீட அறக்கட்டளை இயக்குனர் விஜயபாஸ்கர், பட்டர் சுப்பிரமணி செய்தனர். அறக்கட்டளை உறுப்பினர்கள் பஞ்சவர்ணம், ஷாலினி முன்னிலை வகித்தனர். பொருளாளர் மாமல்லன் கார்த்திக் வரவேற்றார். அன்னதானத்தை கவியரசு கண்ணதாசன் இலக்கிய பேரவை தலைவர் பனகல் பொன்னையா துவக்கி வைத்தார். அறக்கட்டளை தலைவர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார்.
சித்தா, வர்மா, அக்குபஞ்சர் டாக்டர் லிங்கசெல்வி, தலைமையில் மருத்துவக் குழுவினர் இலவச மருத்துவ பரிசோதனை, ஆலோசனை வழங்கினர். மருந்து மாத்திரை வழங்கப்பட்டது. நகர்நல சங்கத் தலைவர் கண்ணன், முன்னாள் கூட்டுறவு சங்கத் தலைவர் ராஜேந்திரன் பங்கேற்றனர். அறக்கட்டளை உறுப்பினர் பொன்ராம் நன்றி கூறினார்.
