ADDED : செப் 25, 2026 05:31 PM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை மத்திய சிறை மற்றும் பெண்கள் தனிச்சிறையில் மீனாட்சி மிஷன் மருத்துவமனை சார்பில் மருத்துவ முகாம் நடந்தது. சிறை கண்காணிப்பாளர் சதீஷ்குமார் துவக்கி வைத்தார்.
இல்லவாசிகள், சிறை பணியாளர்களுக்கு பொது மருத்துவம், பல் மருத்துவம், ஆர்த்தோ மற்றும் தோல் மருத்துவம் சார்ந்த சிகிச்சைகள் வழங்கப்பட்டன. மத்திய சிறையில் 310 பேர், பெண்கள் தனிச்சிறையில் 72 பேர், பணியாளர்கள் 44 பேர் பயனடைந்தனர்.
