/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மாற்றுத்திறனாளிகளுக்கு நவ.25 முதல் மருத்துவ முகாம்கள்
/
மாற்றுத்திறனாளிகளுக்கு நவ.25 முதல் மருத்துவ முகாம்கள்
மாற்றுத்திறனாளிகளுக்கு நவ.25 முதல் மருத்துவ முகாம்கள்
மாற்றுத்திறனாளிகளுக்கு நவ.25 முதல் மருத்துவ முகாம்கள்
ADDED : நவ 22, 2024 04:33 AM
மதுரை: மதுரையில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, கல்வித்துறை சார்பில் மாவட்ட அளவில் 15 வட்டாரங்களில் மருத்துவ முகாம்கள் நடக்க உள்ளன.
ஒருங்கிணைந்த கல்வித்திட்டத்தின் கீழ் பயிலும், 18 வயதுக்குட்பட்ட மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு, மருத்துவசான்று, தனித்துவ அடையாள அட்டை வழங்க இம்முகாம் நடக்கிறது.
நவ.25ல் மதுரை கிழக்கு ஒன்றியத்தில், ஒத்தக்கடை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, நவ.26 மதுரை மேற்கு ஒன்றியம் சொக்கிக்குளம் பாண்டியன் நெடுஞ்செழியன் மாநகராட்சி பள்ளி, நவ.27 கொட்டாம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, நவ.28 மதுரை வடக்கு பகுதிக்கு மதுரை சேதுபதி மேல்நிலைப்பள்ளி, நவ.29 திருமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடக்கிறது.
டிச.3 மேலுார் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, டிச.4 செல்லம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி, டிச.5 உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி மேல்நிலைப்பள்ளி, டிச.6 வாடிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, டிச.10 மதுரை தெற்கு என்.எம்.எஸ்., முத்துலட்சுமி அம்மாள் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி, டிச.11 சேடப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, டிச.12 கள்ளிக்குடி அரசு மேல்நிலைப்பள்ளி, டிச.13 திருப்பரங்குன்றம் ஒன்றியத்திற்கு அவனியாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி, டிச.14 டி.கல்லுப்பட்டியில் அரசு மேல்நிலைப்பள்ளி, டிச.16 அலங்காநல்லுார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் முகாம் நடக்க உள்ளது.
இதில் பங்கேற்போர் ஆதார் அட்டை நகல், பாஸ்போர்ட் சைஸ் போட்டோக்கள் 5, இதற்கு முன் சிகிச்சை பெற்ற ஆவணங்களுடன் வரவேண்டும் என கலெக்டர் சங்கீதா தெரிவித்துள்ளார்.