தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ தாய்ப்பால் தர விருப்பமா மருத்துவச் சான்று தேவை

 தாய்ப்பால் தர விருப்பமா மருத்துவச் சான்று தேவை

 தாய்ப்பால் தர விருப்பமா மருத்துவச் சான்று தேவை


ADDED : பிப் 22, 2026 05:40 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 22, 2026 05:40 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மதுரை அரசு மருத்துவமனை தாய்ப்பால் வங்கி மூலம் நுாற்றுக்கணக்கான பச்சிளம் குழந்தைகள் தாய்ப்பாலை தானமாக பெறுகின்றனர்.

பச்சிளம் குழந்தைகள் நலப்பிரிவு துறைத்தலைவர் டாக்டர் அசோக்ராஜா கூறியதாவது: பச்சிளம் குழந்தைகள் நல வார்டில் ஆண்டுக்கு 5500 குழந்தைகள் சேர்க்கப்படுகின்றனர். அதில் 40 சதவீதம் பேர் 2.5 கிலோ எடையை விட குறைவாக உள்ளனர். குறிப்பாக குறைபிரசவ குழந்தைகள், ஒன்றரை கிலோவுக்கும் குறைவான எடையுடைய, குறைந்த வளர்ச்சியுடைய குழந்தைகள் தான் எங்களது இலக்கு. இவர்களது குடல்பகுதி வளர்ச்சி குறைவாக இருப்பதால் தாய்ப்பால் தான் உணவு, மருந்தாக பயன்படும். அதற்காக தாய்ப்பால் வங்கி அமைக்கப்பட்டுள்ளது. தாய்க்கு பால் சுரந்தால் குழந்தைக்கு அதே பாலை அப்படியே கொடுக்கிறோம். இல்லாதபோது தானமாக பெற்று இயந்திரத்தில் சுத்திகரித்து குழந்தைகளுக்கு வழங்குகிறோம்.

மகப்பேறு வார்டில் குழந்தை பெறும் பெண்களிடம் தாய்ப்பால் குறித்து கவுன்சிலிங் கொடுக்கிறோம். இதன் மூலம் தினமும் சராசரியாக ஒன்றரை லிட்டர் அளவு தாய்ப்பால் கிடைக்கிறது. ஓராண்டாக இந்த அளவு அதிகரிக்கவில்லை. ஆனால் தாய்ப்பால் தேவைப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

பிற அரசு மருத்துமவனை, தனியார் மருத்துவமனைகளில் குழந்தை பெற்ற பெண்களும் தாய்ப்பாலை தானமாக தரலாம். குழந்தை பெற்ற விவரங்கள், முந்தைய மருத்துவ வரலாறு, நோய் குறித்த சான்றுகளுடன் வர வேண்டும். மகப்பேறு வார்டு 5வது மாடியில் தாய்ப்பால் வங்கி செயல்படுகிறது. நேரடியாக இங்கு வந்து காலை 10:00 முதல் மாலை 4:00 மணி வரை தாய்ப்பால் தானமாக தரலாம். காய்ச்சல், பிறநோய்கள் இருந்தால் தரக்கூடாது என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us