/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தேவதாஸ் மருத்துவமனையில் மருத்துவ கண்காட்சி
/
தேவதாஸ் மருத்துவமனையில் மருத்துவ கண்காட்சி
ADDED : நவ 21, 2025 04:19 AM

மதுரை: மதுரை சர்வேயர் காலனி தேவதாஸ் மருத்துவமனையில் மருத்துவ கண்காட்சி துவங்கியுள்ளது.
மருத்துவ உலகில் வேகமாக வளர்ந்து வரும் நவீன சிகிச்சை முறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் இக்கண்காட்சி நடக்கிறது. துணைத்தலைவர் டாக்டர் சதீஷ் தேவதாஸ், நிர்வாக இயக்குனர் டாக்டர் ஹேமா தலைமையில் கண்காட்சி நடக்கிறது. எஸ்.பி., அரவிந்த் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார்.
மருத்துவ நிபுணர்கள், மாணவர்கள், பொது மக்களுக்கிடையே மருத்துவ தொழில் நுட்பம் குறித்தும், விழிப்புணர்வை உருவாக்கும் ஒரு தளமாக இக்கண்காட்சி இடம்பெற்றுள்ளது. பல மருத்துவ துறைகளின் முன்னோடியான பரிசோதனை கருவிகள், மேம்பட்ட அறுவை சிகிச்சை முறைகள், நோயாளி பராமரிப்புக்கான நவீன புதிய தொழில் நுட்பங்கள் காட்சிப் படுத்தப்படுகின்றன. நேரடி விளக்கம், நிபுணர் உரைகள், தகவல் 'டிஸ்ப்ளே'கள் இடம் பெற்றுள்ளன.

