sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 01, 2025 ,கார்த்திகை 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

2026 ஜனவரியில் மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்: 17 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கிறது

/

2026 ஜனவரியில் மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்: 17 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கிறது

2026 ஜனவரியில் மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்: 17 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கிறது

2026 ஜனவரியில் மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்: 17 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கிறது

8


UPDATED : நவ 27, 2024 05:25 AM

ADDED : நவ 27, 2024 05:23 AM

Google News

UPDATED : நவ 27, 2024 05:25 AM ADDED : நவ 27, 2024 05:23 AM

8


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் 17 ஆண்டுகளுக்கு பிறகு 2026 ஜனவரியில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்குள் திருப்பணிகளை முடிக்குமாறு கோயில் நிர்வாகத்திற்கு அறநிலையத்துறை அறிவுறுத்தியுள்ளது.

மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் 2009ல் நடந்தது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும் என்பது ஆகமவிதி. இதன்படி 2021ல் நடந்திருக்க வேண்டும். ஆனால் 2018 பிப்.2ல் கோயிலின் வீரவசந்தரராயர் மண்டபம் தீ விபத்தில் முற்றிலும் சிதைந்தது. சீரமைப்பு பணிக்காக அரசு நிதி ஒதுக்கீடு செய்திருந்தாலும் நிர்வாக காரணங்களால் தாமதமாக பணிகள் துவங்கி நடந்து வருகின்றன. வீரவசந்தராயர் மண்டபத்தை தவிர்த்து இதர திருப்பணிகளை செய்து கும்பாபிஷேகம் நடத்தக்கூடாது என்பதாலேயே 2021ல் கும்பாபிஷேகம் நடத்தப்படவில்லை.

இந்நிலையில் சட்டசபையில் 2 ஆண்டுகளுக்குள் கும்பாபிஷேகம் நடத்தப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இதன்பிறகு திருப்பணிகள் வேகம் எடுத்தன. 4 கோபுர பணிகள் ஸ்பான்சர்கள் மூலம் நடந்து வருகின்றன. இதைதவிர்த்து இதர திருப்பணிகளுக்கு ரூ.25 கோடி பட்ஜெட் ஒதுக்கப்பட்டுள்ளது.

Image 1349620
இதுதவிர வீரவசந்தராயர் மண்டப சீரமைப்பு பணிக்கு நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே களரம்பள்ளி மலையடிவாரத்தில் கற்கள் வெட்டி எடுக்க ரூ.6.40 கோடியும், மண்டப வடிமைப்புக்கு ரூ.11.70 கோடியும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கற்கள் மதுரை புறநகர் பகுதியில் கோயில் இடமான செங்குளத்தில் வடிவமைக்கப்பட்டு கோயிலுக்கு எடுத்து வரப்பட்டு பொருத்தி வருகின்றனர். முதல்வர் அறிவித்தபடி நடத்த வேண்டும் என்பதாலும், சட்டசபை தேர்தல் அறிவிப்பு வெளியானால் பணிகள் தடைபடும் என்பதாலும் 2026 ஜன.26ல் கும்பாபிஷேகம் நடத்துவதென அறநிலையத்துறை நாள் குறித்துள்ளது.

அதற்குள் திட்டமிட்டபடி பணிகளை முடிக்க வேண்டும் என கோயில் நிர்வாகத்திற்கு, அறநிலையத்துறை அறிவுறுத்தியுள்ளது.






      Dinamalar
      Follow us