/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மீனாட்சி அம்மன் கோயில் கோடை வசந்த உற்ஸவம்
/
மீனாட்சி அம்மன் கோயில் கோடை வசந்த உற்ஸவம்
ADDED : மார் 22, 2025 04:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கோடை வசந்த உற்ஸவம் ஏப்.2 முதல் 10 வரை நடக்கிறது. ஏப்.11 பங்குனி உத்திரத்தன்று காலை 10:00 மணிக்கு மேல் மீனாட்சி சுந்தரேஸ்வரர் பஞ்சமூர்த்தி புறப்பாடு நடக்கும்.
செல்லுார் திருவாப்புடையார் கோயிலில் அம்மனும், சுவாமியும் எழுந்தருளி அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடக்கும். மாலையில் சுவாமி வெள்ளி ரிஷப வாகனத்திலும், அம்மன் மரவர்ண சப்பரத்திலும் எழுத்தருளி கோயிலுக்கு வந்து சுவாமி சன்னதி பேச்சிக்கால் மண்டபத்தில் பாதபிட்சாடணம் தீபாராதனை முடிந்து சேர்த்தியாவார்கள்.