/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பள்ளியில் உறுப்புதான விழிப்புணர்வு; மீனாட்சி மிஷன் மருத்துவர்கள் வலியுறுத்தல்
/
பள்ளியில் உறுப்புதான விழிப்புணர்வு; மீனாட்சி மிஷன் மருத்துவர்கள் வலியுறுத்தல்
பள்ளியில் உறுப்புதான விழிப்புணர்வு; மீனாட்சி மிஷன் மருத்துவர்கள் வலியுறுத்தல்
பள்ளியில் உறுப்புதான விழிப்புணர்வு; மீனாட்சி மிஷன் மருத்துவர்கள் வலியுறுத்தல்
ADDED : ஆக 13, 2025 02:21 AM
மதுரை; 'இந்தியாவில் உறுப்புதானம் 10 லட்சம் பேருக்கு ஒருவர் என்பதற்கும் குறைவாக உள்ளதால், பள்ளிப் பாடத்தில் விழிப்புணர்வு அவசியம்' என மீனாட்சி மிஷன் மருத்துவமனை டாக்டர்கள் தெரிவித்தனர்.
ஆண்டுதோறும் ஆக.13 (இன்று) உலக உறுப்பு தான தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் பல்வேறு துறை டாக்டர்கள் ரமேஷ்அர்த்தநாரி, கண்ணன், சம்பத்குமார், ரவிச்சந்திரன், மோகன், ஸ்ரீனிவாசன் ராமச்சந்திரன் கூறியதாவது:
உறுப்புதானத்திற்கு மூளைச்சாவு பற்றிய பொதுமக்களின் புரிதலின்மை, கலாசார நம்பிக்கைகள், மத ரீதியான தவறான கருத்துக்கள் தடையாக உள்ளன. இதுகுறித்த விழிப்புணர்வை பள்ளி பாடத்திட்டத்தில் சேர்த்து, சமூக சுகாதாரத் திட்டங்களோடு ஒருங்கிணைக்க வேண்டும்.
உறுப்புதானத்தில் வெளிப்படையான நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். பற்றாக்குறையை ஈடுசெய்ய உதவும் வகையில் மேம்பட்ட உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளை மருத்துவமனைகள் பின்பற்றுவதும் முக்கியம்.
குழந்தைகளுக்கு மிகவும் மேம்பட்ட சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யும் திறன்மிக்க கருவிகள் எங்களிடம் உள்ளன.
தமிழகத்தில் கடந்தாண்டில் இறப்புக்குப்பின் உறுப்பு தானம் செய்தோர் எண்ணிக்கை 268 பேர். இந்த சாதனை உறுப்பு மாற்று ஆணையம், மருத்துவமனைகள், குடும்பங்களின் ஒருங்கிணைந்த முயற்சியால் கிடைத்தது. மத்திய அரசு, அரசு சாரா நிறுவனம் மூலம் கிராமங்கள் வரை பிரசாரம் செய்ய வேண்டும் என்றார்.