/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மீனாட்சி கோவிலில் லஞ்சம் பெற்ற ஊழியருக்கு அபராதம்
/
மீனாட்சி கோவிலில் லஞ்சம் பெற்ற ஊழியருக்கு அபராதம்
மீனாட்சி கோவிலில் லஞ்சம் பெற்ற ஊழியருக்கு அபராதம்
மீனாட்சி கோவிலில் லஞ்சம் பெற்ற ஊழியருக்கு அபராதம்
ADDED : ஜன 09, 2025 07:21 AM

மதுரை: மதுரை, மீனாட்சி அம்மன் கோவிலில் பக்தர்களை தரிசனத்துக்கு அழைத்து செல்ல பணம் பெற்ற ஊழியருக்கு ௨௦ ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மதுரை, மீனாட்சி அம்மன் கோவிலில், தற்போது அய்யப்ப பக்தர்கள், வட மாநில பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. கட்டண தரிசனம் என்றாலும் நீண்ட நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர்.
இந்நிலையில், கோவில் சேவகர் முத்துக்குமார் என்பவர், 'சம்திங்' பெற்று, சிலரை தரிசனத்திற்கு அழைத்து சென்ற போது, அவ்வழியே வந்த இணை கமிஷனர் கிருஷ்ணன் விசாரித்தார்.
முன்னுக்கு பின் முரணாக முத்துகுமார் பதிலளித்தார். விசாரணையில், கூட்ட நெரிசலை பயன்படுத்தி, தலா 1,000 ரூபாய் பெற்று எட்டு பக்தர்களை அழைத்து சென்றது தெரிந்தது.
முத்துகுமாரை, 'சஸ்பெண்ட்' செய்ய முடிவு செய்த நிலையில், ஆளுங்கட்சி நிர்வாகிகள் தலையீட்டால், 20,000 ரூபாய் அபராதம் மட்டும் விதிக்கப்பட்டது.
இதுகுறித்து இணை கமிஷனர் கிருஷ்ணனிடம் கருத்து கேட்க, அவரை நாம் தொடர்பு கொண்ட போது, அழைப்பை ஏற்கவில்லை.

